Friday 22 October 2021

கிழக்கு மாகாண கொவிட் பரவலின் தற்போதைய நிலைமை..!!!

SHARE


கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று தற்போது படிப்படியாக குறைந்து வருவதாக அந்த மாகாணத்தின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வைரஸ் தொற்றின் காரணமான மரணங்களினதும் எண்ணிக்கை மற்றும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைவடைந்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று(21) நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.தௌபீக் மேலும் தெரிவிக்கையில்,

2021 ஓகஸ்ட் 3ஆம் மற்றும் 4ஆம் வாரங்களில் சராசரியாக 6,000 தொற்றாளார்களும் 100 மரணங்களும் கிழக்கு மாகாணத்தில் பதிவாகின.

செப்டம்பர் முதலாம் வாரத்தில் 4,400 தொற்றாளர்களும் இரண்டாம் வாரத்தில் 3,300 தொற்றாளர்களும், 80 மரணங்களும், மூன்றாம் வாரத்தில் 2,000 தொற்றாளர்களும் 67 மரணங்களும், நான்காம் வாரத்தில் 1,104 தொற்றாளர்களும் 42 மரணங்களும், ஐந்தாம் வாரத்தில் 801 தொற்றாளர்களும் 12 மரணங்களும் பதிவாகிவாகியதாக கூறினார்.
SHARE