
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ராஜகிரிய அபேசேகரபுர போதைப்பொருள் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வௌியான தகவலுக்கு அமைய அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றவியல் பிரிவின் ஊழல் ஒழிப்பு அதிகாரிகளால் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
உடஹமுல்ல, நுகேகொடையில் அமைந்துள்ள அவரின் வீட்டை நேற்று (01) சோதனையிட்டதில் அங்கிருந்து சுமார் 400 கிராம் கஞ்சா கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரான பெண் இன்று (02) கங்கொடவில நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.
Tags:
sri lanka news