மாகாணங்களுக்கு உள்ளான ரயில் சேவை நாளை ஆரம்பம்..!!!




நாளை முதல் மாகாணங்களுக்கு உள்ளான ரயில் சேவைகளுக்காக 133 ரயில்களை ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இருப்பினும் ,நாளை முதல் பருவகால பயணச் சீட்டை கொண்டுள்ள ரெயில் பயணிகளுக்கு மாத்திரமே ரெயில் சேவைகள் இடம்பெறும் என்று ரெயில்வே திணைக்கள பொதுமுகாயைமாளர் தம்மிக்க ஜயசுந்தர கூறினார்.

நாளை கொழும்புக்கு வரும் ரெயில் அளுத்கம, அவிசாவளை, அம்பேபுஸ்ச மற்றும் கொச்சிக்கடை வரையில் மாத்திரம் பயணிக்கும் என்று பொதுமுகாயைமாளர் தம்மிக்க ஜயசுந்தர மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, பயணத் தடை காரணமாக கடந்த சில மாதகாலமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ரெயில் சேவை மாகாணங்களுக்குள் நாளை ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

எனினும், மாகாணங்களுக்கு இடையிலான ரெயில் சேவை இடம்பெறாது. மாகாணங்களுக்கு இடையிலான ரெயில் சேவை எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி கூறினார்.
Previous Post Next Post


Put your ad code here