யாழ். துன்னாலையில் ஹெரோயினுடன் பெண் கைது..!!!


யாழில் ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெண்ணொருவர், ஒரு லட்சத்து 60ஆயிரம் ரூபாய் பணத்துடனும், 50 கிராம் ஹெரோயினுடனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடமராட்சி துண்ணாலை பகுதியில், வீடொன்றில் போதை பொருள் வர்த்தகம் இடம்பெறுவதாக நெல்லியடி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலை அடுத்து , குறித்த வீட்டினை பொலிஸார் சுற்றிவளைத்தனர்.

அதன் போது, வீட்டிலிருந்தவாறே போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டார் என, வீட்டிலிருந்த 30 வயது பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த பெண்ணிடம் இருந்து , ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 50 கிராம் ஹெரோயின் போதை பொருளை கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணை நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here