புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் குறித்த அறிவிப்பு..!!!




ஃபைசர் தடுப்பூசி பெற்றுக் கொடுக்கப்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இதுவரை எந்த சிக்கல்களும், ஒவ்வாமைகளும் பதிவாகவில்லை என நுண்ணுயிரியலாளர் விசேட வைத்தியர் சமன்மலீ குணசேகர கூறினார்.

மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் தடுப்பூசி திட்டத்தின் முன்னேற்றம் குறித்து இன்று (10) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

கொவிட் 19 தடுப்பூசி திட்டத்தின் கீழ் 12 முதல் 19 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஃபைசர் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டம் இம்மாதம் 4 ஆம் திகதி மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் ஆரம்பிக்கப்பட்டது.

அதன்படி, இதுவரை சுமார் 60 குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

புற்றுநோயாளிகளின் தொடர்பான விசேட வைத்திய நிபுணர்களின் ஒப்புதலுடன் தடுப்பூசிகள் வெற்றிகரமாக வழங்கப்படுவதால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட அச்சப்பட வேண்டாம் என அவர் தெரிவித்தார்.
Previous Post Next Post


Put your ad code here