
அம்பன்பொல தெற்கு கிராம உத்தியோகத்தர் நேற்று முற்பகல் இனந்தெரியாத சிலரால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
எஸ்.எம்.சபுகுமார என்ற 51 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
பணிக்காக சென்று கொண்டிருந்த போது வான் வாகனமொன்றில் வந்த குழுவினர் அனுராதபுரம் உதங்காவ பிரதேசத்தில் வைத்து கிராம உத்தியோகத்தரை வழிமறித்து சரமாரியாக வெட்டி காயப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
படுகாயமடைந்த அவர் பிரதேசவாசிகளால் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் முன்பே அவர் உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:
sri lanka news