தொட்டலங்க, சேதவத்த களு பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்று ஓரத்தில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (18) இரவு முதல் குறித்த சடலம் அப்பகுதியில் இருந்ததாகவும் இன்று (19) காலை கிரான்பாஸ் பொலிஸாரினால் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இன்று காலை தொட்டலங்க விக்டோரிய பாலத்திற்கு அருகில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இரு சடலங்கள் தொடர்பிலும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
Tags:
sri lanka news