யாழில் இந்திய வெளிவிவகார செயலாளர் பல்வேறு தரப்பினர்களுடன் சந்திப்பு..!!!


யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷிங்ரிலா பல்வேறுபட்ட தரப்பினர்களுடனும் சந்திப்புகளில் ஈடுபட்டார்.

யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நேற்று (03) இரவு இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இதன் போது இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் ஆகியோரும் உடனிருந்தனர்.

இச் சந்திப்பில், வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், வடமாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் பாராளுமன்ற உறுப்பினரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.கே. சிவாஜிலிங்கம், சுரேஸ் பிரேமச்சந்திரன், யாழ். மாநகர முதல்வர் வி. மணிவண்ணன் உட்பட அரசியல் பிரமுகர்களும், கல்வித்துறை சார்ந்தவர்கள், வர்த்தக துறை பிரதிநிதிகள், அரசியல் ஆய்வாளர்கள் ஆகிய சிலரும் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post


Put your ad code here