நாடளாவிய ரீதியில் 16 முதல் 18 வயதுக்கு இடைப்பட்ட, அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றப்படும்போது, பெற்றோர்களின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் பாடசாலை செயற்பாடுகள் தொடர்பான மேலதிக செயலாளர் எல்.எம்.பி. தர்மசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர், பெற்றோர்களின் அனுமதிக்கான விண்ணப்பப்படிவம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது, அதனைப் பூர்த்தி செய்து, பெற்றோரின் கையொப்பம் பெறப்பட்டிருப்பது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“தடுப்பூசி ஏற்றம் இடம்பெறும் நிலையங்கள் தொடர்பான தகவல்களை, சுகாதார வைத்திய அதிகாரிகள், அதிபர்கள் மற்றும் வலயக் கல்விப் பணிமனை அதிகாரிகள் ஆகியோரிடம் பெற்றோர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
கல்வி அமைச்சு மற்றும் மாகாண கல்வித் திணைக்களம் என்பனவற்றின் இணையத்தளங்களில், இந்தத் தகவல்கள் பதிவேற்றப்படும்” என்றார்
Tags:
sri lanka news