சாவகச்சேரி பகுதியில் நேற்று முதியவர்கள் திடீரென உயிரிழந்திருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நேற்று வெள்ளிக்கிழமை காலை வேளையில் மட்டுவில் வடக்கு சந்திரபுரம் பகுதியைச் சேர்ந்த 70வயதான முதியவர் ஒருவர் தண்ணீர் எடுக்கச் சென்ற போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
அத்துடன் மட்டுவில் தெற்கு சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த 79வயதான முதியவர் ஒருவரும் இவ்வாறு வீட்டில் உயிரிழந்துள்ளார்.
அதேசமயம் வியாழக்கிழமை தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று பின்னர் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 83வயதான மூதாட்டி ஒருவருமே இவ்வாறு திடீரென உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் பி.சி.ஆர் முடிவுகளுக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Tags:
sri lanka news