பிலியந்தலை, கெபிதிகொல்லேவ மற்றும் புனரின் ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
பிலியந்தலை நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றின் கதவை திறக்க முற்பட்ட போது அதில் மோதி மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது, வீதியில் பயணித்த மற்றுமொரு லொறியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் படுகாயமடைந்துள்ளார். பின்னர் படுகாயமடைந்த நிலையில் அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதேபோல், கெபிதிகொல்லேவ, எடவீரகொல்லேவ பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பம் ஒன்றில் மோதியதில் 31 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
செட்டிக்குளம் விசேட அதிரடிப் படை முகாமில் பணி புரியும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, பூனரின் பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் 24 வயதுடைய இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
Tags:
sri lanka news