Tuesday 12 October 2021

ஆசிரியர் ,அதிபர்களின் பணிபகிஸ்கரிப்பு தொடருமா? வெளியான அறிவிப்பு..!!!

SHARE

பிரதமர் மகிந்த ராஜபக்சவுடனான கலந்துரையாடல் நிறைவு பெற்ற நிலையில் தமது பணிபகிஸ்கரிப்பை தொடர்வதா இல்லையா என்பதை அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து கலந்துரையாடி தீர்மானிக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க() தெரிவித்தார்.

அதிபர் ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை தொடர்பாக அரசாங்கத்தின் தீர்வுத் திட்டம் இன்றையதினம் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு தௌிவுபடுத்தப்பட்டது. அலரி மாளிகையில் இன்று நண்பகல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டது.

எனினும், தமது சம்பளப் பிரச்சினையை தீர்ப்பது தொடர்பில் அரசாங்கம் வழங்கும் தீர்வினை ஏற்றுக்கொள்வதா, இல்லையா என்பது தொடர்பில் தொழிற்சங்க பிரதிநிதிகள் கூடி கலந்துரையாடி தீர்மானிக்கவுள்ளதாக ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.

சம்பள கொடுப்பனவை மூன்று கட்டங்களாக வழங்குவதற்கு நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார். எனினும், உத்தேச சம்பளத்தை ஒரே தடவையில் வழங்குமாறு தொழிற்சங்க பிரதிநிதிகள் தொடர்ச்சியாக வலியுறுத்திய போதிலும் இரண்டு கட்டங்களாக வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
SHARE