
குடும்ப பிரச்சினை காரணமாக கணவர் தனது மனைவியை கொலை செய்த சம்பவம் களவாஞ்சிக்குடி பகுதியில் பதிவாகியுள்ளது.
மஹிலுர் பகுதியை சேர்ந்த 31 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கணவரின் தாக்குதலுக்கு உள்ளான பெண்ணை வைத்தியசாலையில் அனுமதிக்கும் சந்தர்ப்பத்தில் அவர் உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கணவன் கடந்த 14 ஆம் திகதி வௌிநாட்டில் இருந்து வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வௌிநாட்டில் இருந்த சந்தர்ப்பத்தில் அவர் குரல் பதிவு ஒன்றின் மூலம் மனைவியை கொலை செய்வதாக தெரிவித்திருந்ததாக உயிரிழந்த பெண்ணின் சகோதரி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கு திருமணமான 8 வருடங்கள் ஆவதுடன் 7 வருடமாக கணவர் வௌிநாட்டில் இருந்ததாகவும் அவர்களுக்கு குழந்தை இல்லாததால் பிரச்சினை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் களவஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
sri lanka news