வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருவோரால் ஆபத்து




வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் மூலம் டெல்டா பிளஸ் இலங்கையில் பரப்புவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.

சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் ஹேமந்த ஹேரத் இதை தெரிவித்தார்.

ஏதேனும் ஒரு வழியில் டெல்டா பிளஸ் இலங்கைக்கு வந்தால், அதன் பரவல் மக்களின் சுகாதாரப் பழக்கத்தை பொறுத்தது என்றும் எச்சரித்துள்ளார்.

இதேவேளை, பயணத்தடைகள் நீக்கப்பட்டதன் பின்னர் நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியாது எனவும் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் பணிப்பாளர் டாக்டர் ரஞ்சித் பதுவன்துடாவ தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here