காலி - பத்தேகமவிலுள்ள குரேகொட என்ற பிரதேசத்தில் வீடு ஒன்றின் வாசலில் வானில் இருந்து மர்ம பொருள் ஒன்று விழுந்துள்ளமையினால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
கடந்த 22ஆம் திகதி இரவு 7 மணியளவில் வானில் இருந்து கல் ஒன்று விழுவதனை அவதானித்த சிறுவர்கள் இருவர் அதில் ஒரு பகுதியை எடுத்து சென்று குடும்ப உறுப்பினர்களிடம் வழங்கியுள்ளனர்.
அதனைக் கையில் தொடும் போது வெப்பத் தன்மை இருந்ததாகவும் அதனை ஒரு பையில் போட்டு வைத்தவேளை அது வெள்ளை நிறத்திலான தூளாக மாறியுள்ளதாகவும் பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தை அவதானித்த குடும்பத்தினர் உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் பரிசோதனைக்காக அதனை எடுத்துச் சென்றுள்ளனர்.
Tags:
sri lanka news