களுத்துறை, தொடங்கொட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று பிற்பகல் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் தொடங்கொட - உடவத்தகொட பகுதியில் வசிக்கும் 54 வயதுடைய யசபெலா மெராயா விஜேகுணதிலக என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த பெண் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில், அவர் வீட்டின் ஒரு அறையில் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சடலத்தை மீட்ட காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தலையில் காயத்துடன் இரத்தம் வழிந்த நிலையில் இவரது சடலம் காணப்பட்டதால், இது படுகொலை என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
களுத்துறை பிரதேச குற்றப் புலனாய்வு அதிகாரிகள் இன்று பிற்பகல் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டனர்.
Tags:
sri lanka news