பாடசாலைகள் ஆரம்பமாக முதல் ஏற்படவுள்ள மாற்றம்..!!!


எதிர்வரும் 21 ஆம் திகதி 200 இற்கும் குறைவான பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகளை மீளவும் ஆரம்பிக்கவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்த நிலையில்

பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுமாயின் தற்போது வெளியிடப்பட்டுள்ள சில சுகாதார வழிகாட்டல்களில் மாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டி ஏற்படும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், அந்த செயற்பாடுகள் உரியவாறு முன்னெடுக்கப்படுகின்றதா? என்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள், முன்கூட்டிய நடவடிக்கை மேற்கொண்டால் அது தவறில்லை என தாம் கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்கள் செயற்பட வேண்டிய முறைமை குறித்து தெளிவுபடுத்த வேண்டும். இதற்கமைய, சுகாதார அமைச்சினால், கல்வி அமைச்சுக்கு விசேட வழிகாட்டல் கோவை வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here