சொண்ட் நிறுவனத்திற்கு மடிக்கணணி அன்பளிப்பு..!!!


தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையுடன் சொண்ட் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் முரண்பாடு நிலை மாற்றத்திற்கான பன்மைத்துவ செயற்பாடு திட்டத்தின் மாதாந்த கலந்துரையாடல் இணையவழி ஊடாக அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் யாழ் மாவட்ட சர்வமத சமாதான சபையின் உறுப்பினர்களான மதத்தலைவர்கள், அரச உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், இளைஞர் கழக உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோரும் தேசிய சமாதானப் பேரவையின் உத்தியோகத்தர்களும் சொண்ட் நிறுவன நிறைவேற்றுப்பணிப்பாளர் மற்றும் சொண்ட் நிறுவனப் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

இதன் போது திட்டத்தின் பயன்பாட்டிற்கென மடிக்கணணி ஒன்று தேசிய சமாதானப் பேரவையினால் சொண்ட் நிறுவன நிறைவேற்றுப்பணிப்பாளர் ச.செந்துராசா மற்றும் இத்திட்டத்தின் மாவட்ட இணைப்பாளர் திருமதி.ஜீனஸ் றெஜிந்தன் ஆகியோரிடம் கையளிப்பட்டதுடன் பல்வேறு திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.தர்மினி



Previous Post Next Post


Put your ad code here