மழை வெள்ளத்தினால் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள்..!!!


நுவரெலியா, கந்தப்பளை மற்றும் இராகலை பிரதேசங்களில் நேற்று ( 29) வெள்ளிக்கிழமை மாலை பெய்த பலத்த மழையினால் என்றும் இல்லாதவாறு வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

பல பிரதேசங்களில் காணப்படும் விவசாய நிலங்களில் வெள்ளநீர் நிரம்பியதால் பல ஏக்கர் விவசாய காணிகள் முற்றுமுழுதாக சேதமடைந்துள்ளன. விவசாய காணியில் உற்பத்தி செய்யப்பட்ட உருளைக் கிழங்கு மற்றும் மரக்கறி உற்பதியில் பாரிய சேதம் ஏற்ட்டுள்ளது

இந்நிலையில் தாழ்ந்த பிரதேசங்களில் உள்ள வீடுகளில் வெள்ளநீர் புகுந்ததால் பல இடங்களில் வீடுகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன . இங்குள்ள வர்த்தக நிலையங்களிலும் வெள்ள நீர் புகுந்ததால் வியாபாரங்களும் பாதிக்கப்பட்டன .பல இடங்களிலுள்ள வீதிகளில் வெள்ளநீர் நிரம்பியதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
Previous Post Next Post


Put your ad code here