கொழும்பில் ஒருதொகை துப்பாக்கி ரவைகள் மீட்பு..!!!





கொழும்பு − பிஸ்டல் வீதியிலுள்ள கட்டடமொன்றிலிருந்து பெருந்தொகை துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனா்.

கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினால் இன்று (14) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இந்த துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.

பிஸ்டல் வீதியிலுள்ள கட்டிடமொன்றின் 5 ஆவது மாடியிலுள்ள மலசல கூடத்திலிருந்து இந்த துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டுள்ளன.

T- 56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 176 ரவைகளும், 9MM துப்பாக்கிக்கு பயன்டுத்தப்படும் 29 ரவைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த ரவைகள் யாரால் விட்டுச் செல்லப்பட்டவை, யாருக்கு சொந்தமானவை, குற்றச்செயல்களுக்கு பயன்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்டனவா என்று பல்வேறு கோணங்களில் கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸாா் குறிப்பிட்டுள்ளனா்.
Previous Post Next Post


Put your ad code here