ஆசிரியர், அதிபர்களின் சம்பள முரண்பாட்டு பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மற்றுமொரு பேச்சுவார்த்தை இன்றைய தினம் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் (Mahinda Rajapaksha) தலைமையில் நடைபெறவிருந்த நிலையில் பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
அத்துடன் தங்களது தொழிற்சங்க நடவடிக்கை தொடருமெனவும் அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் 21ஆம் திகதி பாடசாலைகளை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் அன்றைய தினம் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பாடசாலைகளுக்கு சமூகமளிப்பார்களா என கல்வியமைச்சின் செயலாளரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
நீண்ட காலத்தின் பின்னர் தமது மாணவர்களை காண்பதற்காக ஆசிரியர் மற்றும் அதிபர்கள் நிச்சயம் சமுகமளிப்பார்கள் என்ற அதீத நம்பிக்கை எமக்குள்ளது என்று தெரிவித்துள்ளார்.
எனினும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டாலும், கலவி நடவடிக்கைகள் நடைபெறாது, ஆசிரியர்கள் சமூகமளிக்க மாட்டார்கள் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tags:
sri lanka news