சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 5 பேர் பலி

 


நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 7 மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


நேற்று (06) இரவு 10 மணி முதல் இன்று (07) இரவு 10 மணி வரையில் இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதுளை, இரத்தினபுரி, மாத்தளை, கேகாலை, கண்டி, குருணாகல் மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Previous Post Next Post


Put your ad code here