வவுனியாவில் உழவு இயந்திரத்தில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு..!!!


வவுனியா ஓமந்தை பாலமோட்டை பகுதியில் உழவு இயந்திரத்தில் இருந்து தவறி வீழ்ந்து 5 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.

சம்பவத்தில் பாலமோட்டை பகுதியை சேர்ந்த கந்தலதன் கனிஸன் (வயது 5) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளான்,

குறித்த பகுதியில் உள்ள காணியொன்றினை உழவு இயந்திரத்தின் மூலம் பண்படுத்தும் நடவடிக்கையில் அதன் உரிமையாளர் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது வாடகைக்கு அமர்த்தப்பட்ட குறித்த உழவு இயந்திரத்தின் சாரதி காணியின் உரிமையாளரது மகனையும் அவரது உறவினரது மகனையும் உழவியந்திரத்தில் ஏற்றியபடி நிலத்தினை பண்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

இதன்போது இரு சிறுவர்களில் ஒருவன் திடீர் என கீழே தவறிவீழ்ந்து உழவியந்திரத்திற்குள் சிக்கி படுகாயமடைந்துள்ளான்.

உடனடியாக சிறுவன் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டான். ஆயினும் வைத்தியசாலையில் அனுமதிக்க முதலே சிறுவன் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.

சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here