வெற்றுக் காணியொன்றில் எரிந்த நிலையில் சடலம் ஒன்றின் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஹபரணை காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஹபரணை, குடாரம்பேவ, பொரலுகந்த பிரதேசத்திலேயே இவ்வாறு சடல எச்சம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் காவல்துறையினர் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்ததையடுத்து, கெக்கிராவ நீதவான் ஸ்தல பரிசோதனையை மேற்கொண்டார்.
எலும்புகளை பிரேத பரிசோதனை செய்ய பொலனறுவை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஹபரணை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
sri lanka news