யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு செங்கோல் ஒன்று நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியார் கடந்த ஒக்டோபர் மாதம் குகபதமடைந்தார்.
அவரது நினைவான இந்த செங்கோல் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு வழங்கப்பட்டது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் சிவச்சாரிகளால் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனிடம் நல்லூர் ஆலயத்தில் வைத்து மாலை 5.30 மணியளவில் சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டது.
படங்கள் – ஐ.சிவசாந்தன்