மன்னார் - கோந்தைப்பிட்டி கடற்கரையில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு..!!!



மன்னார் பிரதான பாலத்திற்கு அருகாமையில் உள்ள கோந்தை பிட்டி கடல் பகுதியில் இளம் பெண் ஒருவரின் சடலம் இன்று சனிக்கிழமை(13) அதிகாலை இனம் காணப்பட்டுள்ளது.

இன்றைய தினம் மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைக்காக கடற்கரை பகுதிக்கு சென்ற நிலையிலேயே பெண் ஒருவரின் சடலம் நீரில் மிதப்பதை அவதானித்து மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை மாலை மன்னார் பாலப்பகுதியில் இருந்து பெண் ஒருவர் கடலில் குதித்த நிலையில் அவரை தேடும் பணி இடம் பெற்ற போதும் குறித்த பெண் கிடைக்காத நிலையில் இன்றைய தினம் கரை ஒதுங்கிய சடலம் அப் பெண்ணுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இருப்பினும் குறித்த இளம் பெண்ணின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.
Previous Post Next Post


Put your ad code here

gtag('config', 'G-R9FPB20LQQ');