50 கொக்கைன் போதைப்பொருள் வில்லைகளை தனது உடலில் மறைத்து வைத்திருந்த கென்ய நாட்டு பிரஜை ஒருவரை சுங்க திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் நேற்று (31) காலை 10.30 மணியளவில் கென்யாவில் இருந்து வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது குறித்த நபரை பரிசோதனை செய்த போது அவரது உடலில் இருந்து குறித்த வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த நபர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Tags:
sri lanka news