உரங்கள், விவசாய இராசயனங்களை இறக்குமதி செய்ய அனுமதி..!!!




தரமான இராசயன உரங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

யூரியா உள்பட அடையாளம் காணப்பட்ட இராசயன உர வகைகளுக்கு கொள்வனவு கட்டளை வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர், பேராசிரியர் உதித் கே. ஜெயசிங்க தெரிவித்தார்.

இந்த ஆண்டு பெரும் போக நெற்செய்கைக்கு அவசரத் தேவையாகவும் ஏனைய விவசாயப் பயிர்ச் செய்கைக்காகவும் உரங்கள் மற்றும் விவசாய இரசாயனங்களை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

Previous Post Next Post


Put your ad code here