கண்டி, குருதெனிய வீதியில் இலுக்மோதறை பகுதியில் கார் ஒன்று மகாவலி ஆற்றிற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
நேற்றிரவு (27) இடம்பெற்ற இவ்விபத்தின்போது குறித்த காரில் பயணித்த மூவரில் இருவர் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து காரையும் காணாமல் போன நபரையும் தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
வேகக் கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Tags:
sri lanka news