ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஓடும் பயணிகள் ரயிலில் இளைஞர் ஒருவர் மேற்கொண்ட கண்மூடித்தனமான கத்திக்குத்து தாக்குதலில் 17 பயணிகள் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
ஜப்பான் தலைநகரிலிருந்து நேற்று வழக்கம்போல் மின்சார ரயில் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த ரயில் கோகுரியோ ரயில் நிலையத்துக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, அதிலிருந்த 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சக பயணிகளை திடீரென கத்தியால் குத்தத் தொடங்கினார்.
இதனால் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. ஆனாலும் அந்த வாலிபர் பயணிகளை தொடர்ந்து கத்தியால் குத்தினார். இதில் 17 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும், அந்த வாலிபர் பயணிகளை நோக்கி துப்பாக்கியால் சுடத்தொடங்கினார்.
தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடந்தபோது, ஓகஸ்ட் 6-ம் திகதி ஓடும் ரயிலில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 10 பேர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
Tags:
world news