குளியாப்பிட்டி – கடவளகெதர பகுதியில் வீடொன்றில் மதுபோதையில் அமைதியின்மையை ஏற்படுத்திய இளைஞர் ஒருவர் தந்தையால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மதுபோதையில் இருந்த குறித்த இளைஞர் தனது தந்தையை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்பின்னர் தந்தையினால் பொல்லால் தாக்கப்பட்டு காயமடைந்த குறித்த இளைஞர், குளியாப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
முனமல்தெனியவைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொலைச் சம்பவம் தொடர்பில் 46 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Tags:
sri lanka news