இன்று (21) காலை தெனியாய ஆதார வைத்தியசாலைக்கு அருகில் மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றுமொருவர் காயமடைந்து தெனியாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் மாகொல கடற்படை முகாமில் கடமையாற்றும் 36 வயதுடைய கொட்டபொல, கெடபருவகம பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் மதுபோதையில் இருந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பில் தெனியாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
sri lanka news