அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை மாணவியின் அசத்தலான கண்டுபிடிப்பு

 


அவுஸ்திரேலியாவில் சிட்னி பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் கல்வி கற்றுவரும் இலங்கை மாணவி ஒருவர் புதிய கண்டுபிடிப்பு ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

அந்த வகையில் உயர் தொழில்நுட்பத்திறன் கொண்ட குண்டு துளைக்காத மூன்று உலோகத்தினாலான கவச உடையை இவர் தயாரித்துள்ளார்.

சிட்னி பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பினை தொடர்ந்து வரும் பிரபானி ரணவீர என்பவரே குறித்த கவச உடையை தயாரித்துள்ளார்.

தனது, முதுகலை பட்டப்படிப்பை முடிக்க அவர் மேற்கொள்ள வேண்டிய ஆராய்ச்சிக்காக இந்தப் புதிய கண்டுபிடிப்பைச் செய்துள்ளார்.

தம்மால் உருவாக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட, உயர் தொழில்நுட்பத்திறன் கொண்ட குண்டு துளைக்காத உடை, போர்க்களத்தில் ஏற்படும் உயிரிழப்பிலிருந்து பாதுகாக்கிறது என்பதை தனது ஆராய்ச்சியில் மூலம் வெளிப்படுத்தியுள்ளதாக மாணவி பிரபானி ரணவீர தெரிவித்துள்ளார்.

புதிய வடிவமைப்பின் எடையை வெகுவாகக் குறைக்க உருக்கு தவிர, டைட்டானியம் மற்றும் அலுமினியம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

இந்த கண்டுபிடிப்பு, தாக்குதலின் பின்னரான மன உளைச்சலை 80 சதவீதம் வரை குறைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post


Put your ad code here