நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்துக்கு தொடர்ந்தும் இடைக்கிடையே மழை பெய்து வருகின்றது.
தலவாக்கலை பகுதியில் நேற்று இரவு முதல் பெய்த கனத்த மழை காரணமாக தொடர்ந்தும் மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் ஒரு வான்கதவு திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்க பொறியியளாளர் ஒருவர் தெரிவித்தார்.
எனவே கொத்மலை நீர்த்தேக்கத்தின் கீழ் தாழ்நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக நீரேந்தும் பகுதிகளுக்கு பெய்து வரும் மழை காரணமாக டெவோன் சென்கிளையார் நீர் வீழ்ச்சிகளின் நீர் மட்டமும் உயர்ந்துள்ளது.
எனவே நீர் வீழ்ச்சிக்கு அருகாமையில் செல்வதனை தவிர்த்து கொள்ளுமாறு பாது காப்பு தரப்பினர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Tags:
sri lanka news