இலங்கையில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 22 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14,108 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களில் 09 பெண்களும் 13 ஆண்களும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்று உறுதியான மேலும் 496 பேர் இன்று இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 555,700 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 15, 239 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருவதுடன், ஏனையோர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
sri lanka news