இனந்தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்பு..!!!




பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெளதாரி முனை கல்முனை கடலில் இனந்தெரியாத நபர் ஒருவரின் சடலம் இனங்காணப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெளதாரி முனை கல்முனை கடல் பகுதியில் இவ்வாறு இன்று (23) காலை சடலம் ஒன்று கிடப்பதாக பூநகரி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை பார்வையிட்டதுடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த சடலம் ஆணொருவரினது என பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் மேலதிக விசாரனைகளை பூநகரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here