தீருவில் பொதுப்பூங்காவில் நிகழ்வு நடத்துவதற்கான அனுமதி கோரல் நிராகரிப்பு..!!!

தீருவில் பொதுப் பூங்காவில் எந்த ஒரு நிகழ்வையும் நடாத்த அனுமதி வழங்க வேண்டாமென வல்வெட்டித்துறை பொலிஸ் உத்தியோகத்தரால் அறிவுறுத்தப்பட்டமையால், தங்கள் கோரிக்கையை சாதகமாக பரிசீலிக்க முடியாதுள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு, வல்வெட்டித்துறை தவிசாளர் நகராட்சி மன்றம் தவிசாளர் ச.செல்வேந்திரா கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மேற்படி விடயம் தொடர்பான தங்களின் 23.11.2021 ஆம் திகதி கோரிக்கை கடிதம் சார்பானது.

இம்மாத இறுதிவரை தீருவில் பொதுப்பூங்காவில் எந்த ஒரு நிகழ்வையும் நடாத்த அனுமதி வழங்க வேண்டாமென வல்வெட்டித்துறை பொலிஸ் உத்தியோகத்தரால் அறிவுறுத்தப்பட்டமையால் மேற்படி தங்கள் கோரிக்கையை சாதகமாக பரிசீலிக்க முடியாதுள்ளது என்பதை மனவருத்தத்துடன் அறியத்தருகின்றேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here