நடுக்கடலில் தவறி விழுந்த இந்திய மீனவரின் சடலம் கரை ஒதுங்கியது..!!!




கடல் சீற்றம் காரணமாக நடுக்கடலில் தவறி விழுந்த இந்திய மீனவரொருவரின் சடலம் காரைநகர் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது.

தமிழகத்தின் நாகை மாவட்டத்தில் இருந்து கடந்த 2 ஆம் திகதி மூவர் மீன்பிடிக்க கடலுக்குள் சென்ற நிலையில் கடல் சீற்றம் காரணமாக படகிலிருந்து மீனவர் ஒருவர் கடலில்தவறி விழுந்து மாயமானார்.

மாயமான மீனவரை கடந்த 4 நாட்களாக சக மீனவர்கள் தேடிவந்த நிலையில் இன்று மதியம் அவர் காரைநகர் கடற்கரையில் சடலமாக கரை ஒதுங்கினார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here