யாழ்.கரையோரங்களில் சடலங்கள் தொடர்ந்து கரையொதுங்குகின்றன..!!!


யாழ்ப்பாண கரையோரங்களில் சடலங்கள் தொடர்ந்து கரையொதுங்கி வருகின்றன.

யாழ்.மருதங்கேணி கடற்பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சடலம் ஒன்று கரையொதுங்கியள்ளது. நான்கு நாட்களில் நான்காவதாக சடலமாக கரையொதுங்கியுள்ள சடலமாகும்.

ஏற்கனவே கடந்த சனிக்கிழமை வல்வெட்டித்துறை , மணற்காடு கரையோரத்தில் இரு சடலங்களும் , மறுநாள் ஞாயிற்றுக்கிழமை நெடுந்தீவு கடற்பரப்பில் ஒரு சடலமும் கரையொதுங்கியுள்ள நிலையில் இன்றையதினம் மருதங்கேணி கடற்பகுதியிலும் ஒரு சடலம் கரையொதுங்கி உள்ளது.

கரையொதுங்கிய நான்கு சடலங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் தெரியாத நிலையில் சடலங்கள் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளன.

சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here