கிண்ணியா படகு விபத்து எதிரொலி ! - பாராளுமன்ற உறுப்பினர் வீட்டின் மீது தாக்குதல்..!!!


திருகோணமலை கிண்ணியா, குறிஞ்சாக்கேணி பாலம் விவகாரத்தில் தீர்வில்லை எனக்கூறி முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தௌபீகின் வீட்டின் மீது பொதுமக்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் இன்று(23) படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 7 பேர் மரணமடைந்ததுடன் குறித்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் படகு விபத்தின் பலி எண்ணிக்கை உயர்ந்ததை அடுத்து கிண்ணியாவில் பதற்ற நிலைமை தோன்றியிருந்தது.

இதனை தொடர்ந்து அப்பகுதியில் அமைந்துள்ள முஸ்லீம் காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக்கின் வீட்டின் மீது பொதுமக்கள் ஆவேசத்துட தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் கடற்படையினர் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளதுடன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



 

Previous Post Next Post


Put your ad code here