விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் இயக்குநர்..!!!


விஜய்சேதுபதி, இயக்குனரும் தற்போது பல படங்களில் நடிகராக நடித்து வரும் கௌதம் வாசுதேவ் மேனன் இருவரும் முதல்முறையாக இணைந்து நடிக்கின்றனர்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் கரன்சி புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் இணைந்து 'மைக்கேல்' என்ற புதிய ஆக்சன் படத்தை தயாரிக்கின்றனர். இதில் சந்தீப் கிஷன் முதன்மையான வேடத்தில் நடிக்கிறார். விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தை இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கவிருக்கிறார்.

இந்த படத்தில் தற்போது இயக்குநரும், நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடிக்கிறார். பல சூப்பர்ஹிட் படங்களை இயக்கிய இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் சில படங்களிலும், வலைதளத் தொடர்களிலும் நடித்து தன்னுடைய நடிப்புத்திறமையையும் வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

இந்த படத்தில் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் சந்தீப் கிஷன் புரட்சிகரமான எழுத்தாளர் ஒருவரின் தீவிர ஆதரவாளராக நடிக்கிறார். ‘மைக்கேல்’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக வெளியிடப்பட்ட போஸ்டரில் ரத்தம் தோய்ந்த கையும், கைவிலங்கும் இடம்பெற்றிருக்கிறது

சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் இணைந்திருப்பதால் ‘மைக்கேல்’ படத்திற்கான எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
Previous Post Next Post


Put your ad code here