Tuesday 30 November 2021

கஞ்சா ஏற்றுமதிக்கு தயார் – சட்டவரைவு விரைவில் நாடாளுமன்றில் முன்வைக்கப்படும்..!!!

SHARE

கஞ்சா ஏற்றுமதிக்கு தேவையான சட்டவரைவை நாடாளுமன்றத்தில் முன்வைத்து அங்கீகாரம் பெற உள்ளதாக சுதேச மருத்துவ ஊக்குவிப்பு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்தார்.

இன்று (30) நாடாளுமன்றத்தில் சுகாதார அமைச்சு உள்பட பல அமைச்சுக்களின் செலவினங்கள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஏற்றுமதிக்கு மட்டுமே அனுமதி பெறப்படும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

பாரம்பரிய மருத்துவம் சட்டப்பூர்வமாக்கப்பட்டு வருவதாகவும், கஞ்சா புற்றுநோயை குணப்படுத்தும் என்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் ஜெயக்கொடி தெரிவித்தார்.

உள்ளுர் மருந்து உற்பத்திக்கு தேவையான மூலப்பொருளை நாட்டிலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், சுதேச மருத்துவ முறையின் மூலம் அந்நிய செலாவணியை பெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் கூறினார்.
SHARE