நண்பனின் காதலி வீட்டில் கொள்ளையிட சென்ற நபர் அடித்து கொலை..!!!




முல்லேரியாவ பகுதியில் உள்ள வீடொன்றில் கொள்ளையில் ஈடுபட சென்ற பாதாள உலக குழு உறுப்பினர் ஒருவர் பிரதேசவாசிகளின் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஊரு ஜுவா என்ற பாதாள உலக குழு உறுப்பினரின் உதவியாளர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முல்லேரியாவ, சந்திரிக்கா மாவத்தையில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்பனை செய்யும் வீடொன்றிற்குள் நேற்று இரவு நுழைந்த இனம்தெரியாத இருவர் வீட்டில் இருந்தவர்களின் நகை மற்றும் பணம் கேட்டு மிரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் இரண்டரை மணி நேரம் குறித்த கொள்ளையர்கள் வீட்டிற்குள் இருந்ததாகவும் இதனையடுத்து வீட்டில் இருந்த ஒருவர் உதவி கேட்டு சத்தமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது மதுபானம் கொள்வனவு செய்ய வந்த குழு ஒன்றினால் குறித்த சந்தேக நபர்களை பிடிக்க முற்பட்டபோது அதில் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.

இதன்போது சிக்கிக் கொண்ட நபரை குறித்த குழுவினர் தாறுமாறாக தாக்கியுள்ளதுடன் பலத்த காயங்களுக்கு உள்ளான குறித்த நபரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு உயிரிழந்த நபர் கடந்த வாரம் விளக்கமறியலில் இருந்து வௌியில் வந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த நபருடன் வருகை தந்த மற்றைய நபரின் காதலியின் வீட்டிலேயே இவ்வாறு கொள்ளையிட சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Previous Post Next Post


Put your ad code here