அடுத்த வாரம் முதல் பாடசாலைகள் முழுமையாக இயங்கும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனைக் குறிப்பிட்டார்.
கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன மேலும் தெரிவித்ததாவது;
அனைத்து தர மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் அடுத்த வாரம் மீண்டும் ஆரம்பிக்கப்படும்.
ஒக்டோபர் முதலாம் திகதிக்குப் பின்னர் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டன.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.
பாடசாலைகளை மீளத் திறப்பதற்கு முன்னர் 2 லட்சத்து 40 ஆயிரம் ஆசிரியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி போட முடிந்தது- என்றார்.
தற்போது, ஆரம்பப் பிரிவு மற்றும் 10, 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கைகள் நடத்தப்படுகின்றன.
நாட்டில் கோரோனா வைரஸ் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து பல வாரங்களுக்கு பாடசாலைகள் மூடப்பட்டன.
Tags:
sri lanka news