வடமாகாண ஆளுநர் செயலகம் முன் போராட்டம்..!!!


நியமனத்தில் புறக்கணிக்கப்பட்ட சுகாதார தொண்டர்கள் வடக்கு ஆளுநர் செயலக முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்

வடக்கு மாகாணத்தில் நீண்ட காலமாக சுகாதாரத் தொண்டர்களாக பணியாற்றிய 970 பேரில் முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் எடுத்த முயற்சியின் பயனாக 349 பேருக்கு அவர்களது சேவை கால அடிப்படையில் அரச நியமனத்துக்கான நியமன கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டது

அதில் ஏனையோரிற்கு நியமனம் வழங்கப்படாத நிலையில் தமக்கும் குறித்த நியமனத்தை வழங்குமாறு கோரி இன்றைய தினம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்றலில் நியமனத்தில் வழங்கப்படாத வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுகாதார தொண்டர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாங்களும் நீண்ட காலமாக தொண்டு அடிப்படையில் சுகாதாரத் தொண்டர்களாக கடமையாற்றியிருக்கிறோம் மொத்தமாக 970 பேர் வடக்கு மாகாணத்தில் உள்ளோம். ஆனால் 349 பேருக்கு மாத்திரமே நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டு தற்போது அவர்களுக்குரிய நியமனம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது எனினும் நாம் ஒரு வைக்கின்ற கோரிக்கை என்னவென்றால் வடக்கு மாகாணத்தில் உள்ள 970 சுகாதாரத் தொண்டர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்குவதற்கு தற்போது வடக்கு மாகாணத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியே இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என தெரிவித்தனர்.
Previous Post Next Post


Put your ad code here