நாட்டுக்கு நன்மை பயக்கும் வகையில் கடன் மறுசீரமைப்பு

 


நாட்டுக்கு நன்மை ஏற்படும் வகையில் கடன் மறுசீரமைப்பை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் (Ajith Nivard Cabraal) தெரிவித்துள்ளார்.

வரவு செலவு திட்டம் தொடர்பில் தொலை காணொளி ஊடாக மத்திய வங்கியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலில் பங்கேற்று கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

வெளிநாடுகளிலிருந்து பெறப்பட்ட கடனை மீளச் செலுத்தும் இயலுமை எமக்குள்ளது. அத்துடன் நாட்டுக்கு நன்மை பயக்கும் வகையில் கடன் மறுசீரமைப்பை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

உதாரணமாக கடன் எல்லையை நீடித்தல் மற்றும் குறைந்த வட்டிக்கு கடனை பெறுதல் உள்ளிட்ட செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post


Put your ad code here

gtag('config', 'G-R9FPB20LQQ');