யாழ். கொக்குவில் கேணியடிப் பகுதியில் நடந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு நடந்த இந்த சம்பவத்தில் கொக்குவில் கேணியடிப் பகுதியினைச் சேர்ந்த உதயகுமார் ரதீபன் என்னும் இளைஞரே காயமடைந்துள்ளார்.
ஒரு மோட்டார் சைக்கிலில் வந்த 3 பேராலேயே அந்த இளைஞர் மீது வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது. கை, கால் பகுதிகளில் காயமடைந்த குறித்த இளைஞர் அங்கிருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றது.
Tags:
sri lanka news