முறையாக முகக்கவசம் அணியாத நபர்களுக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் முறையாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது கட்டாயமாகும்.
கொவிட் பரவல் நிலை மேல் மாகாணத்தில் உள்ள மக்களின் செயற்பாடுகளில் அதிகரித்தமையை காணக்கூடியதாக உள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
இதனால், மேல் மாகாணத்தை மையமாகக் கொண்டு விசேட பொலிஸ் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
Tags:
sri lanka news