வெடிவிபத்தில் 15 வயதுச் சிறுவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை மூதூர் தோப்பூர் அல்லேநகர் பகுதியில் இன்று பிற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டில் வளர்க்கப்படும் ஆடுகளுக்கு உணவு தேடி அருகாமையில் உள்ள பாலைநிலம் ஒன்றிற்குச் சென்று மரக்கிளைகளை வெட்டிய வேளையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதில் பலத்த காயம் அடைந்த சிறுவன் தோப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
மூதூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
sri lanka news