ஆனமடுவ பிரதேசத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் ஏற்பட்ட தீ விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் தீயில் உடல் கருகி உயிரிழந்துள்ளார்.
ஆனமடுவ – சிலாபம் வீதியில் சங்கட்டிக்குளம் பகுதியில் நேற்று (02) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மூன்று பிள்ளைகளின் தந்தை மோட்டார் சைக்கிளில் சிக்கிக்கொண்ட நிலையில் திடீரென ஏற்பட்ட தீயில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் ஆனமடுவ முதலக்குளிய பகுதியைச் சேர்ந்த 60 வயதான ராஜகருணா ஹேரத் முதியன்சலாகே ரங்பண்டார என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் மூன்று பெண் பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த மற்றையவர் புத்தளம் ஆதார வைத்தியசாலையையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 21 வயதான சந்துன் சுரங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விபத்தின் போது எரிபொருள் தாங்கியின் மூடி கழன்று விழுந்ததால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவத்தின் போது பிரதேசவாசிகள் தீயை அணைக்க முயன்ற போதிலும் கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளான குறித்த நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Tags:
sri lanka news